ஆர்ச்சர்ட் ரோடு சண்டை: ஒருவர் பலி, 14 பேர் கைது

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த சண்டையில் 29 வயது முகம்மது இஸ்ராட் முகம்மது இஸ்மாயில் என்பவர் உயிர் இழந்தார்.

14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கான்கோர்ட் சிங்கப்பூர் ஹோட்டலும் பேரங்காடியும் அமைந்துள்ள 100 ஆர்ச்சர்ட் ரோடு என்ற முகவரியில் நடந்த சம்பவம் குறித்து ஞாயிறு காலை 6 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோசமாகக் காயமுற்ற திரு முஹம்மது இஸ்ராட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

பல காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட 23 வயதான மற்றோர் ஆடவர் சுயநினைவுடன் இருந்தார்.

பாலகிருஷ்ணா சுப்பிரமணியம், 32, மர்வின் வெரில் டாவுத், 28, சிஜேஷ் அசோகன், 25, ஆகிய மூவர்மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆயுதத்தைக் கொண்டு சண்டையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்கள் மூவரும் திரு கவிந்த் ராஜ் கண்ணன், 24, திரு அருண் களியப்பெருமாள், 32, திரு மனோஜ்குமார் வேலாயநாதம், 31, திரு ஸ்ரீதரன் இளங்கோவன், 28, திரு அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாறன், 29, திரு விஷ்ணு சூரியமூர்த்தி, 27 ஆகியோரும் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.

கும்பலைச் சேர்ந்த ஒருவர் அல்லது ஒருவருக்கும் மேல் ஆயுதங்களை வைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது திரு இஸ்ராட் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

28, 32 வயதுடைய மேலும் இரண்டு ஆடவர்கள் சம்பவ இடத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஞாயிறு காலை 9.30 மணி அளவில் செங்காங்கில் உள்ள ஃபர்ன்வேல் ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் காவல்துறையினர் மூன்று ஆடவர்களையும் மாது ஒருவரையும் கைதுசெய்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து மேலும் ஐந்து ஆடவர்கள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைதுசெய்யப்பட்டனர்.

பிற்பகல் 4.45 மணி அளவில் மருத்துவமனையில் 27 வயது ஆடவர் ஒருவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். பின்னர் அதே நாள் இரவு 8.50 மணிக்கு மருத்துவமனையில் 24 வயது ஆடவரும் அகப்பட்டார்.

திங்கட்கிழமை காலை 30 வயது ஆடவர் காவல்துறையினரிடம் சரணடைந்தபோது கைதுசெய்யப்பட்டார்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

பாலகிருஷ்ணா, மர்வின், சிஜேஷ் ஆகியோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்புவர். விசாரணை காரணங்களுக்காக அவர்களைத் தடுப்புக்காவலிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆயுதத்தைக் கொண்டு சண்டையிட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!