வீட்டு முகவரியைப் பதிவு செய்யத் தவறிய நபருக்கு $2000 அபராதம்

1 mins read
42686f39-3f24-47ee-b145-1d2a56e0fedd
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வீட்டு முகவரியை சரியாகப் பதிவுசெய்யத் தவறிய நபருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லீ கா ஹின் என்ற 62 வயது சிங்கப்பூரர் மீது செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது

தேசியப் பதிவு சட்டத்தின் படி சிங்கப்பூரில் வீடு மாற்றம் செய்பவர்கள் 28 நாள்களுக்குள் அவர்களது புதிய முகவரியை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.

ஹின், ஜாலான் புக்கிட் மேராவில் வாடகைக்குக் குடியிருந்தார். ஏப்ரல் 2020ஆம் ஆண்டு அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.

அதன் பின்னர் அவரது புதிய முகவரியை அவர் பதிவு செய்யவில்லை.

ஆடவரின் பழைய முகவரிக்குக் குடிநுழைவு அதிகாரிகளிடம் இருந்து கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடிநுழைவு அதிகாரிகளிடம் வீட்டு உரிமையாளர் தகவல் கொடுத்தார்.

அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆடவர் தமது பழைய முகவரியை வைத்து பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை அவர் திருப்பியும் தரவில்லை.

அதைத்தொடர்ந்து ஆடவரை அதிகாரிகள் அடையாளம் கண்டு அபராதம் விதித்தனர்.

குறிப்புச் சொற்கள்