ஜூரோங் லேக் தோட்டத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 5) காலை 25 வயது ஆடவர் ஒருவர் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.
வழக்கத்துக்கு மாறான இச்சம்பவம் குறித்து காலை 8.30 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
ஜூரோங் லேக் தோட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்ப்பகுதியில் அந்த ஆடவரின் உடல் மிதந்தது கண்டறியப்பட்டது.
அந்தப் பகுதியைச் சுற்றி காவல்துறையினர் தடுப்புவேலி போட்டிருந்ததை இணையத்தில் வலம் வந்த படங்கள் காட்டின.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல்துறை வாகனம் ஒன்றும் காணப்பட்டது.
அந்த ஆடவர் நீரின் மேற்பரப்பிலிருந்து மீட்கப்பட்ட பிறகு, அவர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் அறிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, அந்த ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கவில்லை.

