செங்காங் கடைத்தொகுதியில் உள்ள ஓர் இருக்கையில் மதுபோதையில் படுத்துக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரை ‘கம்பஸ் ஒன்’ உணவகத்தின் சமையல்காரர் மானபங்கப்படுத்தினார்.
மதுபான வாடை வீசிய அந்த ஆடவரை மானபங்கப்படுத்திய பிறகு, ஆங் சூ மார்ன் என்ற அந்தச் சமையல்காரர் அங்கிருந்து புறப்பட்டு, ஆடவரின் அந்தரங்க உறுப்புகளை மானபங்கப்படுத்த மீண்டும் மூன்று முறை திரும்பினார். அந்த நேரத்தில், ஆடவர் தூங்கிக்கொண்டிருந்தார்.
26 வயதான ஆங் சூ மார்னுக்கு ஏழு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற ஆண்டு அக்டோபரில் நடந்த அந்தச் சம்பவத்தில் தாம் அந்தக் குற்றத்தைப் புரிந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மியன்மாரைச் சேர்ந்த ஆங் சூ மார்ன் தகாத படங்களை வைத்திருந்த மற்றொரு தனிப்பட்ட குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
அந்த 29 வயது ஆடவர் எழுந்தவுடன், தமது கைப்பேசியைக் காணவில்லை என்று உணர்ந்து கடைத்தொகுதியில் உள்ள பாதுகாப்பு அதிகாரியை அணுகியபோது மட்டுமே அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்தக் கைப்பேசியைப் பற்றி நீதிமன்ற ஆவணங்கள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு அதிகாரி கண்காணிப்புக் கருவியில் உள்ள படங்களைப் பார்த்த பிறகு, ஆடவர் மானபங்கப்படுத்தப்பட்டதை அறிந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கற்றிஞர் கார்ல் டான் கூறினார்.
ஆங் சூ மார்ன் சென்ற ஆண்டு அக்டோபர் 10ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.