எம்ஆர்டி பெண் பயணி ஒருவரின் பாவாடைக்குள் படமெடுத்ததற்காகப் பிடிப்பட்ட ஆடவர் ஒருவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட இத்தகைய படங்களை வைத்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
மறைவிலிருந்து தகாத படங்களை எடுத்த குற்றச்சாட்டு ஒன்றை ஒப்புக்கொண்ட லாய் ஸீ யாங்கிற்குத் திங்கட்கிழமை (ஜூன் 9) 28 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லாய்க்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
26 வயது குற்றவாளி, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணப்பதிவு செய்துகொண்டார்.
நவம்பர் 1ஆம் தேதியன்று நண்பரைப் பார்க்க ஜாலான் பசாரிலிருந்து சென்றுகொண்டிருந்த லாய், தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்தில் நின்ற ரயிலிருந்து வெளியேறினார்.
ரயில் நிலையத்தின் மின்படிக்கட்டுகளின்மீது ஏறிகொண்டிருந்தபோது, பாவாடை அணிந்திருந்தப் பெண்ணைத் தன்முன் நின்றதை லாய் கண்டார்.
எப்போதெல்லாம் குட்டைப் பாவாடை அணியும் பெண்கள் தன்முன் வருகிறார்களோ அப்போது அவர்களது பாவாடைக்குள் படமெடுக்கும் ஆசை லாய்க்கு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லாய் அந்தப் பெண்ணை அவ்வாறு படமெடுத்துக்கொண்டிருந்ததை அந்நேரத்தில் வழிப்போக்கர் ஒருவர் பார்த்தார். அந்த வழிப்போக்கர் நடந்ததை உடனே சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தெரிவித்ததை அடுத்து காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறைந்தது வேறு பத்துப் பெண்களை லாய் இவ்வாறு படமெடுத்திருப்பது விசாரணையின்போது தெரியவந்தது.
மறைவிலிருந்து தகாத படங்களை எடுப்போர்க்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

