தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோமன் கத்தோலிக்க பாதிரியாருடன் தொடர்புடையவர் சிறுமியை மானபங்கம் செய்ததாக சந்தேகம்

1 mins read
1f05fefb-880b-4a8c-82c3-9d0dcbe6ad08
கோப்புப் படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்க சமயத்தின் ‘ஆர்ச்டியோசீஸ்’ (Archdiocese) பாதிரியாருடன் தொடர்புடைய ஆடவர் ஒருவர், சிறுமியை மானபங்கப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஸெபடீ ரெக்ஸ் ஃபெர்னாண்டோ எனும் அந்த 57 வயது ஆடவர், 2004ஆம் ஆண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது. அந்த வீட்டு முகவரியையோ சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தையோ வெளியிட அனுமதி இல்லை.

அக்குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் சந்தேக நபர், ரோமன் கத்தோலிக்க பாதிரியாருடன் தொடர்பில் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

ரெக்ஸ் ஃபெர்னாண்டோ மீது இம்மாதம் 14ஆம் தேதியன்று மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏன் 20 ஆண்டுகள் ஆயின என்பதற்கான விளக்கம் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

ரெக்ஸ் ஃபெர்னாண்டோ, ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான ‘ஆர்ச்டியோசீஸ்’ குழுவின் நிர்வாகப் பிரிவில் கணக்காளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்று 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதை இம்மாதம் 11ஆம் தேதியன்று அவர் தனது வேலையிடத்தில் தெரியப்படுத்தியதாக பேராயர் தொடர்பு அலுவலகம் (Archbishop’s Communications Office) செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 19) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தது.

இந்த விவகாரம் முடிவுக்கு வரும் ரெக்ஸ் ஃபெர்னாண்டோ தற்காலிகப் பணிநீக்கம் செய்ப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்