ஆடவர் ஒருவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதியன்று தனது இரண்டு வயது மகன் அழுகையை நிறுத்தாததால், அவனை மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்தார்.
அந்த மகனுக்கு இடது கன்னத்திலும் வலது முன்னங்கையிலும் காயங்கள் ஏற்பட்டன.
அதற்கு மறுநாள் தனது கேள்விகளுக்குப் பதில் அளிக்காததால் தனது ஏழு வயது மகனிடம் கோபமடைந்த அந்த ஆடவர், அலுமினிய ஆடை மாட்டும் ஹேங்கரைக் கொண்டு கிட்டத்தட்ட 20 முறை அவனை அடித்தார்.
அந்தப் பையனுக்கு முகம், முதுகு, நெஞ்சுப் பகுதி, மூட்டுகள் ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்தது.
54 வயதான அந்த ஆடவர், மூத்த மகனைத் துன்புறுத்தியதற்கான குற்றச்சாட்டை பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படும்போது, இளைய மகன் தொடர்பான அதுபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
வழக்கு விசாரனை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

