மருத்துவராகப் பணியாற்ற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த ஆடவர்

1 mins read
52ffad6d-3b56-4ebf-a184-5a64eaca3f9c
குற்றவாளியான பெர்னார்ட் டான் வென் ‌ஷெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அறுவை சிகிச்சை தேவைப்படாத அழகு மேம்பாட்டுச் சேவை வழங்குவதில் கைதேர்ந்த ஒருவர் மருத்துவர் உரிமம் பெற நான்கு தகுதி ஆவணங்களை (certificates of competence) சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

அவற்றில் இரண்டு போலி ஆவணங்கள், குற்றவாளியான பெர்னார்ட் டான் வென் ‌ஷெங் செல்லாத பயிலரங்குகளுடன் தொடர்புடையவை.

மருத்துவர் உரிமம் வழங்கும் நடைமுறைகளில் தகுதி ஆவணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த ஆவணங்களைக் கொண்டுதான் சுகாதார அமைச்சு, மருந்தகம் நடத்துவதற்கான உரிமம் வழங்கலாமா என்று முடிவெடுக்கும்.

பொதுமக்கள், உரிமம் பெற்ற அழகு மேம்பாட்டுச் சேவை வழங்கும் நிபுணர்களை நாடுவதை உறுதிசெய்ய நடப்பில் இருக்கும் முறையில் தகுதி ஆவணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேவைப்படும் சேவையை சரியான நிபுணர்கள்தான் தங்களுக்கு வழங்குகின்றனர் என்ற நம்பிக்கையை, சேவையை நாடுவோரிடையே ஏற்படுத்துவது நோக்கம்.

டான், 35, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது, அரசாங்க ஊழியரிடம் பொய்த்தகவல் அளித்தது எனத் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை திங்கட்கிழமை (ஜூன் 30) ஒப்புக்கொண்டார். அவருக்குத் தீர்ப்பளிக்கும்போது மேலும் இரு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்படும்.

வரும் ஜூலை மாதம் 29ஆம் தேதி டானின் வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்