தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத செயல்; அமெரிக்க, வியட்னாமிய குடிமகன்மீது குற்றச்சாட்டு

1 mins read
274d76a9-caaa-4482-910d-4c464ee33863
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாக நுயன் டுய் கிம் என்னும் 61 வயது ஆடவர்மீது எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா, வியட்னாம் ஆகிய நாடுகளின் குடிமகனான கிம் 10.4 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாக நம்பப்படுகிறது.

வெளிநாடுகளில் மோசடி செய்யப்பட்ட பணத்தை நல்ல பணமாக அவர் மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிம் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களைத் தொடங்கி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் 10 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான பணம் வந்துள்ளது.

கிம் தற்போது 120,000 வெள்ளி பிணையில் உள்ளார். அவர் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி செய்யப்பட்ட பணம் என்று தெரிந்தே அதை வைத்திருந்தால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்