சிங்கப்பூரில் 20 வயது ஆடவர் ஒருவர் தமது அண்டை வீட்டுக்காரரின் பூனையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
அதற்காக அவருக்கு ஓராண்டு மற்றும் ஆறு மாதம் நன்னடத்தை கண்காணிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தைக் கண்காணிப்புக் காலத்தின்போது அந்த இளையர் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வீட்டில் இருக்க வேண்டும். மேலும் அவர் 70 மணி நேரம் சமூக சேவைகள் செய்ய வேண்டும்.
இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இந்தத் துன்புறுத்தல் சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்புக் கருவியில் பதிவானது. அப்போது அந்த இளையருக்கு 18 வயது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அக்காணொளியைப் பலரும் கண்டனர்.
ஆடவரின் துன்புறுத்தலால் பூனைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
தம் மீதான குற்றத்தை அந்த இளையர் ஒப்புக்கொண்டார்.