23,940 பேரைப் பாதித்த தகவல் கசிவு தொடர்பில் நிறுவனத்திற்கு $9,000 அபராதம்

23,940 பேரைப் பாதித்த தகவல் கசிவு தொடர்பில் நிறுவனத்திற்கு $9,000 அபராதம்

1 mins read
3a858886-0284-41a8-b8c6-2d7a75353688
செஞ்சுரி எவர்கிரீன் இணையத்தளத்தில் இருந்து 2022 டிசம்பரில் 96,880க்கு மேற்பட்ட தனிநபர் தகவல் ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

மனிதவளச் சேவை வழங்கும் செஞ்சுரி எவர்கிரீன் நிறுவனத்திற்கு சிங்கப்பூரின் தகவல் பாதுகாப்புக் கண்காணிப்பு, $9,000 அபராதம் விதித்துள்ளது.

நிறுவனத்தின் இணையத்தளத்தில் இருந்து 23,940 பேரின் அடையாள அட்டை விவரங்கள் திருடப்பட்டது இதற்குக் காரணம்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் மூன்று நாள்களில் 96,880க்கு மேற்பட்ட ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பகுதிநேர ஊழியர்களை வேலைக்கு எடுக்க உதவும் செஞ்சுரி எவர்கிரீன் நிறுவனம், வேலை தேடுவோரின் அடையாளத்தையும் தகுதியையும் சரிபார்க்கும் நோக்கில் அவர்களது அடையாள ஆவணங்களை கேட்டுப் பெறுகிறது.

இந்தத் தகவல் கசிவு தொடர்பில் டிசம்பர் 11, 2022ல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது.

விசாரணையில், உரிய தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்