மலாய்/முஸ்லிம் சமூகம் ஒன்றுபட அழைப்பு: மசகோஸ்

1 mins read
77825cc3-c35d-4c49-950d-65d5c2edcb47
அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலாய்/முஸ்லிம் ஒன்றுபட அழைப்பு விடுத்தார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.

பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் செயல் கட்சி 30 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) அன்று அதிகாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும், சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ்.

சமூக ஊடகங்களில் பற்பல அக்கறைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக கூறிய அமைச்சர், ‘‘இத்தேர்தலுக்குப் பிறகு நாம் ஒன்றிணைந்து சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்; நாம் சாதிக்க ஏராளம் உள்ளது,’’என்றார்.

மேலும் அவர்களின் அக்கறைக்குரிய விஷயங்களைக் கண்டறிய மலாய்/முஸ்லிம் சமூகத்தினரைத் தாம் சென்றடையவுள்ளதாகவும் திரு மசகோஸ் கூறினார்.

அப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் மலாய்/முஸ்லிம் சமூகத்திற்காக வரவிருக்கும் இஸ்லாமிய கல்லூரி குறித்த திட்டத்தையும் மசகோஸ் குறிப்பிட்டுப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்