தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மற்றும் குழுவினர்’ - நூல் வெளியீடு

1 mins read
1bfee2d8-2a65-4ede-a04e-cf6a8e58bae1
சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் கவிஞர் யாழிசை மணிவண்ணனின் ‘மற்றும் குழுவினர்’ நூல் வெளியீடு கண்டது. - படம்: அ. பிரபாதேவி 

சிங்கப்பூரின் அலர்ப் பதிப்பகம், கவிஞர் யாழிசை மணிவண்ணன் எழுதிய ‘மற்றும் குழுவினர்’ என்ற கவிதை நூலை வெளியிட்டு பதிப்பகத் துறையில் கால்பதித்துள்ளது.

சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் இம்மாதம் 10ஆம் தேதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இடம்பெற்றது. இது கவிஞர் யாழிசை மணிவண்ணன் வெளியிட்ட ஐந்தாவது நூல்.

கவிஞரின் கவிதைகள் பொருத்தமான படங்களோடும் பின்னணி இசையோடும் திரையிடப்பட்டன.

கவிதைக்கான சிறுவிளக்கத்தினைக் கவிஞர் தீபக் சொல்ல, கவிதைக்கேற்ற ஒரு திரைப்பாடலின் சில வரிகளை மாணவி ஜானவி ஹரிநாராயணன் பாடினார். இப்படி நான்கு கவிதைகள் கானங்களுடன் ஒளிபரப்பப்பட்டன.

கவிஞர் சி. கருணாகரசு நூலினை வெளியிட, கவிஞர் கி. கோவிந்தராசு பெற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்