சிங்கப்பூர் வானில் தோன்றும் வருடாந்தர இடிஏ அகுவாரிட்ஸ் விண்கல் காட்சி மே 6, 7ஆம் தேதிகள் அதிகாலை நேரத்தில் தோன்றவிருக்கிறது.
வானிலை சாதமாக இருந்தால் அந்த அரிய காட்சியைக் காண முடியும்.
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் உள்ள ஆய்வகம் நட்சத்திரங்கள், சிறுகோள், இதர கோள்கள் விட்டுச் செல்லும் துகள்களைப் பூமி கடந்து செல்லும்போது விண்கல் காட்சி இடம்பெறுவதாக வெள்ளிக்கிழமை (மே 2) தெரிவித்தது.
மணலைவிட சிறியதாக இருக்கும் அத்தகைய துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதும்போது எரிந்துவிடுவதால் வானில் வால் நட்சத்திரம் அல்லது விண்கல் காட்சியை ஏற்படுத்துகிறது.
இடிஏ அகுவாரிட்ஸ் என்பது ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் விண்கல் காட்சி.
அது ஹெலிஸ் கோமெட் என்ற நிகழ்வுடன் தொடர்புடையது.
அந்த ஹெலிஸ் கோமெட் நிகழ்வு மிகவும் பிரபலமனாது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்தது.
இடிஏ அகுவாரிட்ஸ் விண்கல் காட்சி மிகவும் துரிதமாக நடைபெறக்கூடியது. அது நொடிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மோதுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒருசில விண்கற்கள் பல நிமிடங்கள் நீடிக்கக்கூடிய ஒளியை வானில் விட்டுச் செல்லும்.
அந்தக் காட்சி உச்சகட்டத்தை எட்டும்போது ஒரு மணி நேரத்தில் 50 விண்கற்கள் எரியும் காட்சி வரை பார்க்கமுடியும்.
விண்கல் காட்சியைத் தெளிவாகக் காண கடற்கரைகள், பூங்காக்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்த, இருளான இடங்களுக்குச் செல்லலாம் என்று ஆய்வகம் குறிப்பிட்டது.

