இணையவழிக் கற்றல்தளத்திற்கு மீண்டும் அனுமதி

இணையவழிக் கற்றல்தளத்திற்கு மீண்டும் அனுமதி

1 mins read
0e61833a-6901-4760-aa3e-c4ed7796145d
‘ஈஸ்ட் ஏஷியா ஃபோரம்’ என்ற இணையவழிக் கற்றல்தளத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு கட்டுரை தொடர்பில் ‘பொஃப்மா’ திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - படம்: ஈஸ்ட் ஏசியா ஃபோரம்

சிங்கப்பூரில் ‘ஈஸ்ட் ஏஷியா ஃபோரம்’ என்ற இணையவழிக் கற்றல்தளம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அந்தக் கல்வித் தளத்திற்குக் கடந்த வாரத் தொடக்கத்தில், ஒரு கட்டுரை தொடர்பில் திருத்த உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

திருத்த உத்தரவை அந்தக் கற்றல்தளம் முற்றிலும் நிறைவேற்றாததால் தொடர்பு, தகவல் அமைச்சு அதனை முடக்கியது.

பொஃப்மா உத்தரவை ரத்து செய்ய அந்தக் கற்றல்தளம் விண்ணப்பித்துள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.

அக்கட்டுரை ஆசிரியர் சான் யிங்-கிட்டின் வேண்டுகோளின்பேரில், அக்கட்டுரையுடன் தொடர்புடைய அனைத்தையும் அந்த இணையத்தளம் நீக்கியது.

சிங்கப்பூர் அரசாங்கம் குறித்து தவறான கருத்துகள் அடங்கிய அக்கட்டுரையை நீக்கியதால் அந்தக் கற்றல்தளம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்