மெகாஸ்பீட் விவகாரம்: தொடர்ந்து ஆலோசிக்கச் சிங்கப்பூர், அமெரிக்கா இணக்கம்

மெகாஸ்பீட் விவகாரம்: தொடர்ந்து ஆலோசிக்கச் சிங்கப்பூர், அமெரிக்கா இணக்கம்

படம்: ஏஎஃப்பி

15 Nov 2026 - 10:08 am

2 mins read

https://www.straitstimes.com/asia/singapore-us-commit-to-continue-discussions-on-megaspeed-case?ref=top-stories

மெகாஸ்பீட் விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஆலோசித்தன. இது குறித்துத் தொடர்ந்து விவாதிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ நவம்பர் 12, 13 தேதிகளில் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டார்.

வெள்ளை மாளிகை அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை அலுவலக இயக்குநர் மைக்கல் கிராட்சியோஸ், துணை வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டோஃபர் லாண்டாவ் ஆகியோரை அமைச்சர் டியோ சந்தித்தார்.

மெகாஸ்பீட் குறித்த விவரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

இருப்பினும் எந்தெந்த தகவல்கள் விவாதிக்கப்பட்டன, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற மேல் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குகிறது. சீனாவின் உளவாளி என சந்தேகிக்கப்படும் ஏலிஸ் ஹூவாங் அந்த நிறுவனத்தில் இயக்குநராகச் செயல்பட்டுள்ளார்.

மெகாஸ்பீட் நிறுவனம் பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள என்விடியா சில்லுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

நிறுவனத்தின் கட்டமைப்பு கொள்முதலில் பொய்த் தகவல்கள் உள்ளதாக 202ஆம் பிப்ரவரி மாதம் முதல் சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஏலிசுக்கும் என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங்கிற்கும் இடையில் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜென்சன் நவம்பர் 12ஆம் தேதி பதவி விலகினார்.

அதேபோல் சிங்கப்பூர் காவல்துறையும் சுங்கத்துறையும் விரிவான விசாரணை நடத்தின. அதையடுத்து ஏலிஸ் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

மெகாஸ்பீட் நிறுவனம் தொடர்பான விசாரணையில் அமெரிக்கா போதிய உதவி வழங்கவில்லை எனச் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு நவம்பர் 12ஆம் தேதி கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்