தொழுகைக்கான இடத்தைப் பயன்படுத்துவதில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தவிதப் பாரபட்சமும் காட்டப்படவில்லை.
பள்ளிவாசல்கள், குடியிருப்புப் பேட்டைகள் மற்றும் தங்குமிடங்களில் ஒதுக்கப்பட்ட கூடுதல் இடங்களை தங்களுடைய நோன்புப் பெருநாள் தொழுகைக்கு வெளிநாட்டு ஊழியர்கள் பயன்படுத்தலாம் என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று விளக்கமளித்தது.
சிங்கப்பூர் பங்ளாதேஷ் சமூகம் வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பு ஒன்று, சமூக ஊடகங்களில் கட்டுக்கடங்காமல் பரவியதைத் தொடர்ந்து முயிஸின் அறிக்கை வெளியானது.
பங்ளாதேஷ் முஸ்லிம் ஊழியர்களுக்கு எழுதப்பட்ட அந்தக் குறிப்பில், ஏப்ரல் 22ஆம் தேதி தங்களுடைய தங்குமிடங்களிலேயே தொழுகை மேற்கொள்ளும்படி முயிஸ் கேட்டுக் கொண்டதாக அச்சமூகம் குறிப்பிட்டிருந்தது.
இது நெரிசல் ஏற்படுவதையும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படுவதையும் தடுக்க உதவும் என்றும் அனைவரின் ஆரோக்கியம், பாதுகாப்பு உறுதி செய்ய உதவும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவித்தது.
இதில் முயிஸ் சார்பில் பங்ளாதேஷ் சமூகம் கையெழுத்திட்டு இருந்தது. ஞாயிறு மதியம் முதல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்மறையான விமர்சனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
ஒரு டுவிட்டர் பதிவாளர், "இது அபத்தமானது. வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தங்களுடைய மதிப்புமிக்க விடுமுறை நாள்களில் பள்ளிவாசல்களில் தொண்டூழியம் செய்கின்றனர். தங்களுடைய சம்பளத்திலிருந்து தாராளமாக நன்கொடை வழங்கு கின்றனர்," என்று கூறியுள்ளார்.
மற்றொரு பதிவாளர், "மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா, ஊழியர்களுக்கான போக்குவரத்தை பரவலாக்க முடியுமா, கூடுதல் இடங்களை ஒதுக்க நிதியுதவு வழங்கப்படுமா என்று கேட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் உள்ளூர் பள்ளிவாசல்களில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்ட முயிஸ், உள்ளூர், வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக, வசதியாக தொழுகையில் ஈடுபடு வதற்காக பள்ளிவாசல்களுடன் சேர்ந்து முயிஸ் செய்துள்ள முழு ஏற்பாடுகள் பற்றி பங்ளாதேஷ் சமூகத்தின் அறிக்கையில் தெரி விக்கப்படவில்லை என்று கூறியது. "தங்குமிடங்களில் தொழுகைக்கான இடங்களை மும் மடங்கு அதிகரித்துள்ளோம். தீவு முழுவதும் உள்ள நமது குடி யிருப்பு பேட்டைகளில் கூடுதலாக 10,000 இடங்களுக்கான இருபதுக்கும் மேற்பட்ட தொழுகை இடங்களை அறி முகப்படுத்தியுள்ளோம்," என்ற முயிஸ், உள்ளூர் பள்ளி வாசல்களில் மட்டும் 240,000 தொழுகைக்கான இடங்கள் இருப்பதாகத் தெரிவித்தது.

