சிங்கப்பூரில் நான்கில் ஒரு பெரியவருக்கு லேசான மன அழுத்தம் அல்லது பதற்றத்துக்கான அறிகுறிகள் இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் 19 விழுக்காட்டினருக்கு மிதமான மன அழுத்தம் அல்லது பதற்றத்துக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் ஏழு விழுக்காட்டினரிடம் கடுமையான அறிகுறிகள் தென்படுவதாகவும் ஆய்வு கூறியது.
இந்த ஆய்வைத் தேசிய சமூக சேவை மன்றம் ஏப்ரல், மே மாதங்களில் இணையம் வாயிலாக நடத்தியது.
18 வயதும் அதற்கும் மேற்பட்ட 6,700 சிங்கப்பூர்வாசிகள் ஆய்வில் பங்கெடுத்தனர்.
இதற்கிடையே, தேசிய சமூக சேவை மன்றமும் ‘டச் சமூக சேவை’ எனும் சமூக சேவை அமைப்பும் இணைந்து வழிநடத்தும் ‘பியாண்ட் த லேபல் கலெக்டிவ்’ அமைப்பு, ‘பியாண்ட் த லேபல்’ எனும் விழாவை நடத்தியது.
இந்த விழா செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில் பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏறத்தாழ 4,000 பேர் கலந்துகொண்டனர்.
கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் டச் அமைப்பும் இணைந்து வேலையிட மனநல மையம் ஒன்றைத் திறக்கவுள்ளன.
இந்த மையம் 2026ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிய மையம் சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

