விரைவில் குணமடையும் பாதிரியார்; இன்ப அதிர்ச்சியில் அமைச்சர் விவியன் பாலிகிருஷ்ணன்

1 mins read
76f450ef-6bce-404e-8798-4e662ed1ce91
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் இரு நாள்களுக்கு முன்பு கத்திக்குத்துக்கு ஆளான பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ வெகு விரைவில் குணமடைந்து வருவதைக் கண்டு தாம் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பாதிரியார் கிறிஸ்டஃபரைத் தாம் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சந்தித்ததாக டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் தெரிவித்தார். வாயில் மோசமான காயங்கள் ஏற்பட்டபோதும் பாதிரியார் நல்ல சுயநினைவுடன் இருந்ததாகவும் அவரால் தெளிவாகப் பேச முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதிரியார் கிறிஸ்டஃபர் தைரியமும் பாசமும் கொண்ட சிறப்பான மனிதர் என்றும் டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

பாதிரியார் கிறிஸ்டஃபர், நமது சமூகத்துக்குத் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்பதற்காக இறைவன் அவருக்கென ‘திட்டம்’ வைத்திருப்பதாகவும் டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் கூறினார். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிறரை மன்னிக்கும் பக்குவம் வேண்டும் என்றும் டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் குறிப்பிட்டார்.

பாதிரியார் கிறிஸ்டஃபர் குணமடையும் வேளையில் அவரைத் தொடர்ந்து ஆசிர்வதித்துப் பாதுகாக்கவும் இறைவனை வேண்டுவதாக டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்