தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அரசதந்திரப் பயணப்பை சேவை தொடர்பில் பொய்யுரைத்ததற்காகச் சிறைத்தண்டனை பெற்றவர்

பொய்யுரைத்த தலைமைச் செயலாளரைப் பதவி நீக்கம் செய்தது வெளியுறவு அமைச்சு

1 mins read
4ac859d1-bda3-49d8-8fcd-7a226cf2c12c
கில்பர்ட் ஓ ஹின் குவானுக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளியுறவு அமைச்சில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய கில்பர்ட் ஓ ஹின் குவான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசதந்திரப் பயணப்பை சேவை தொடர்பில் பொய்யுரைத்ததற்காக அவர் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.

46 வயதாகும் ஓ, மார்ச் 27ஆம் தேதி, வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலகத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

ஒழுங்கு நடவடிக்கையின் முடிவில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சு கூறியது.

கடந்த ஆண்டு (2024) மே மாதம், அவருக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து அவர் செய்திருந்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால், இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அவர் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்.

அரசதந்திரி அல்லாத தோழி ஒருவருக்காக அரசதந்திர பயணப்பை சேவையைப் பயன்படுத்தி விலையுயர்ந்த பொருள்களை பெய்ஜிங்கிலிருந்து சிங்கப்பூர் கொண்டுவர ஏற்பாடு செய்தது மட்டுமன்றி, விளக்கம் கேட்ட மேலதிகாரியிடம் அந்தப் பொருள்கள் குறித்து அவர் பொய்யுரைத்தது நிரூபிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்