ஃபியெட்ரிஷா அமெலியா முகம்மது ஃபார்மி எனும் 15 வயதுச் சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்தால் முன்வந்து தெரியப்படுத்துமாறு காவல்துறை வியாழக்கிழமை (நவம்பர் 20) அழைப்பு விடுத்தது.
ஃபியெட்ரிஷா கடைசியாக இம்மாதம் 12ஆம் தேதி ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள அப்பர் சிராங்கூன் ரோட்டில் இருக்கும் புளோக் 365Bல் காணப்பட்டார்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 எனும் காவல்துறையின் அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்தோ www.police.gov.sg/i-Witness எனும் இணைய முகவரி வாயிலாகவோ தகவலைத் தெரியப்படுத்தலாம்.
எல்லாத் தகவல்களும் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

