கம்போடியாவில் காணாமல்போன சிங்கப்பூர் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்

கம்போடியாவில் காணாமல்போன சிங்கப்பூர் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்

1 mins read
02d67093-8b06-42f2-b303-e032f505c42c
சிட்டி ஆய்ஷா செரேகார் சஹாட் கம்போடிய தேசியக் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக உள்ளார். - படம்: கம்போடிய உள்துறை அமைச்சு

கம்போடியாவில் காணாமல்போன சிங்கப்பூர் மாணவி வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இரவு கம்போடிய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

கல்லூரியில் பயிலும் 20 வயது சிட்டி ஆய்ஷா செரேகாரைக் காணவில்லை என்று அவரது தந்தை சஹாட் செரேகார் சமூக ஊடகத்தில் உதவிகோரி பதிவிட்டிருந்தார்.

அந்தப் பெண்ணைக் கம்போடிய தேசியக் காவல்படையினர் கண்டுபிடித்தனர். அவர் பாதுகாப்பாக உள்ளார் என்பதைச் சிங்கப்பூர்க் காவல்துறை உறுதிப்படுத்தியது.

“நாங்கள் கம்போடிய தேசியக் காவல்துறையுடன் தொடர்பில் உள்ளோம். மேல் விவரங்களை அறிந்து தேவையான உதவிகளைச் செய்வோம்,” என்று காவல்துறை ஏஷியாஒன் ஊடகத்திடம் தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சும் கம்போடியத் தலைநகர் நொம்பென்னில் உள்ள சிங்கப்பூர் தூதரகமும் பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவு வழங்கிவருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

விரைவாக உதவி வழங்கி அவரைத் தேடிக் கண்டுபிடித்த கம்போடிய அதிகாரிகளுக்குச் சிங்கப்பூர்க் காவல்துறை நன்றி தெரிவித்துக்கொண்டது.

வெள்ளிக்கிழமை காலைவரை பெண்ணின் பெற்றோராலும் காவல்துறை அதிகாரிகளாலும் அவரைக் கம்போடியாவில் தொடர்புகொள்ளமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்