தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவால்களை எதிர்நோக்கும் உயர் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள்

2 mins read
8257d133-3fc8-40a0-a414-ccfff92b98ca
காக்கி புக்கிட்டிலுள்ள கிரேஃபோர்ம் ஒருங்கிணைந்த கட்டுமான, முன்தயாரிப்புத் தொழிற்சாலை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஒரு தொழிற்பேட்டை வட்டாரத்தில் உள்ள பொதுச் சாலையில் ஒருசில வாரங்களாக 20 கனரக வாகனங்கள் வரை சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் கட்டடப் பாகங்கள் இருந்தன.

அவை, வீடுகளையும் அலுவலகங்களையும் உருவாக்க கட்டுமானத் தளங்களில் ‘லேகோ’ கட்டைகளைப் போல அடுக்கிவைக்கப்படும் கட்டடப் பாகங்கள்.

அந்தக் கட்டடப் பாகங்களுக்கு முன்பதிவு செய்த குத்தகையாளர்கள் கட்டுமானத் தாமதங்களால் அவற்றைச் சில நேரங்களில் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

எனவே அந்தப் பாகங்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த கட்டுமான, முன் தயாரிப்பு நடுவம் (ஐசிபிஎச்) சாலைகளில் அவற்றை நிறுத்திவைக்கின்றது.

முறையான இடங்களில் அவற்றை வைப்பதற்கான செலவைவிட சாலையோரங்களில் அவற்றை நிறுத்துவதற்காகும் செலவு குறைவு என்பது நிறுவனங்களின் வாதம்.

கட்டடப் பாகங்கள் கொண்ட கனரக வாகனங்களை நிறுத்திவைக்க நிலப்பகுதி ஒன்றை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்காகும் செலவைவிட சாலை ஓரங்களில் அவற்றை நிறுத்திவைக்கும்போது விதிக்கப்படும் அபராதம் மிகக் குறைவு என்று ஐசிபிஎச் நிறுவனம் சொன்னது.

“சட்டவிரோதமாகக் கனரக வாகனத்தை நிறுத்துவதால் அடிக்கடி அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு கனரக வாகனத்துக்கும் $100 வரை அபராதம் விதிக்கப்படும்,” என்றார் ஐசிபிஎச் நிறுவனத்தின் நிர்வாகி.

கட்டடப் பாகங்களின் விநியோகத்தில் ஏற்படும் தாமதம், அவற்றை நிறுத்திவைக்க இடம் தேடுவது ஆகியவை ஐசிபிஹெச் நிறுவனத்தைச் சிங்கப்பூரில் நடத்துவோர் எதிர்கொள்ளும் சில சவால்கள்.

பலமாடி, அதிநவீன தொழிற்சாலைகளில் தானியக்க முறையில் கட்டடத்துக்குத் தேவையான சுவர்கள், வடிவங்கள், கழிவறைகள் போன்றவற்றை இந்த நிறுவனங்கள் தயாரிக்கின்றன. பின் அவை உரிய கட்டுமானத் தளங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கால்பதித்த ஐசிபிஹெச் நிறுவனங்களின் எண்ணிக்கையை 2020ஆம் ஆண்டுக்குள் பத்தாக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் தற்போது ஆறு ஐசிபிஹெச் நிறுவனங்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்