கடந்த இரண்டு வரவுசெலவுத் திட்டங்களை மேற்பார்வையிட்ட பொதுத்துறை ஊழியர் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நிற்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.
நிதி அமைச்சின் பாதுகாப்பு, மீள் திறன் திட்டங்களின் இயக்குநரான 38 வயது திரு ஷான் லோ, ஏப்ரல் 6ஆம் தேதி அரசாங்கச் சேவையிலிருந்து விலகுவார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
கடந்த சில வாரங்களில் பதவி விலகிய மூத்த அரசு ஊழியர்களில் இவர் ஐந்தாமவர்.
2023 ஜூன் மாதத்தில் நிதி அமைச்சில் சேர்ந்த திரு லோ 2024, 2025ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்ட இயக்குநராக இருந்தார்.
அதற்கு முன்னர், பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தில், சிங்கப்பூர் வணிகங்கள் மற்றும் தொழில்துறை மனிதவள மேம்பாட்டின் துணைத் தலைவராக இருந்தார்.
காமன்வெல்த் கேபிடல் குழுமத்தில் 2020 முதல் 2021 வரை வணிக விரிவாக்கத்திற்குப் பொறுப்பேற்றிருந்தார்.
கல்வி அமைச்சில் 2011ல் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கிய திரு லோ, மனித வள அமைச்சிலும் பணியாற்றியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பல அரசாங்க சேவையாளர்களின் பதவி விலகல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வேட்பாளர்களைத் தேடும்போது, மக்கள் செயல் கட்சி (மசெக) பாரம்பரியமாக அரசாங்கச் சேவையாற்றும் தலைவர்களை நாடுவது வழக்கம். தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டவர்கள், பதவியில் இருக்கும்போது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாததால், தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவார்கள்.