ஏஐ முகவர்களிடம் நிதிக் கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம்: நாணய ஆணையம்

ஏஐ முகவர்களிடம் நிதிக் கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம்: நாணய ஆணையம்

படம்: சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழா

19 Nov 2026 - 4:46 pm

1 mins read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முகவர்கள் பாதுகாப்பாகவும் பயனர்களின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டும் செயல்படுவதை உறுதிசெய்ய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் இல்லாததால், பயனீட்டாளர்கள் தங்களது நிதிக் கணக்குகளின் உள்நுழைவு விவரங்களை அவற்றுக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணைய நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழாவில் உரையாற்றிய அவர், ஏஐ முகவர்கள் தவறாகவோ அல்லது வரம்பை மீறியோ பரிவர்த்தனை செய்தால் யார் பொறுப்பேற்பது என்ற சவால் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்குத் தீர்வாக, முகவர்களின் அடையாளம், அதிகாரம், நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் பொதுவான ‘உங்கள் முகவரை அறிந்துகொள்ளுங்கள்’ நெறிமுறையை ஆணையம் வகுக்கவுள்ளது.

மேலும், ‘ஃபியூச்சர் ஆஃப் ஃபைனான்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, பெருநிறுவன நிதி மேலாண்மை, கட்டணச் சேவைகளில் ஏஐ முகவர்கள், மின்னிலக்கப் பணத்தைப் பயன்படுத்துவது குறித்த சோதனைத் திட்டத்தையும் ஆணையம் அமைக்கவுள்ளது.

ஏஐ முகவர்களின் செயல்பாடுகளுக்குத் தெளிவான வரம்புகள் இருக்க வேண்டும் என்றும் அவற்றின் நோக்கங்கள், நடவடிக்கைகள் மீது பயனீட்டாளர்களும் வணிகங்களும் முழுக் கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்றும் திரு சியா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்