தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிரப்புத்தொகையை 25,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர்

1 mins read
கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தகவல்
b6618418-14c7-4c1d-a75b-006794e11f57
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளையே ஆக அதிகமானோர் நாடியதாக கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்தார். - படம்: சாவ்பாவ்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிரப்புத்தொகையாக வழங்கப்பட்ட $4,000ஐ, 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 25,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயன்படுத்தியுள்ளதாக கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிரப்புத்தொகை கடந்தாண்டு மே மாதம் வழங்கப்பட்டதை அடுத்து, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளையே ஆக அதிகமானோர் முதல் ஏழு மாதங்களில் மேற்கொண்டனர். இதன்கீழ் மின்னிலக்கமுறை விளம்பரப்படுத்துதல், தரவுக் காட்சிப்படுத்துதல் போன்ற திறன்களும் அடங்கும்.

நாடாளுமன்றத்தில் $4,000 உதவி நிரப்புத்தொகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் கான் இவ்வாறு பதிலளித்தார்.

நாற்பது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரர்களுக்கான நிரப்புத்தொகை குறித்து 2024ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் தொடர்பாக சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வழங்குவதே இதன் நோக்கம். ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கைத்தொழிலில் முன்னேறுவதை இது ஊக்குவிக்கிறது.

பாதுகாவல் புலன்விசாரணை, மொத்த வியாபாரம் சில்லறை வியாபாரம் போன்றவற்றிலும் அதிகமானோர் பயிற்சி மேற்கொண்டதாக திருவாட்டி கான் தெரிவித்தார்.

“இன்று, நிலைமுறை பயிற்சிக்கு ஏதுவான 7,000க்கும் அதிகமான பயிற்சி வகுப்புகளுக்கு $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில்) உதவித்தொகையைப் பயன்படுத்த முடியும்,” என்று அமைச்சர் கான் விளக்கினார்.

பயிற்சி வகுப்புகள் தொடர்பில் உயர்கல்விக் கழகங்களும் ‘என்டியுசி லெர்னிங்ஹப்’ போன்ற தனியார் பயிற்சி வழங்குநர்களும் அதிகம் நாடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஸ்கில்ஸ்ஃபியூச்சர்பயிற்சிவேலைப் பயிற்சிநாடாளுமன்ற உறுப்பினர்நாடாளுமன்ற உறுப்பினர்கள்வாழ்க்கைத்தொழில்