கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் பேரங்காடிகளில் மலிவான இன்னும் கூடுதலான பொருள்களை எதிர்பார்க்கலாம்

1 mins read
ddaabfea-ada9-4ed6-85ee-843a60d2c308
தீவின் பல பகுதிகளில் இன்னும் கூடுதலான கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் கிளைகளை எதிர்பார்க்கலாம். - படம்: சாவ்பாவ்

கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் பேரங்காடிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இன்னும் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதோடு கூடுதல் கிளைகளையும் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் பேரங்காடிகளில் இன்னும் பலதரப்பட்ட பொருள்களும் விற்கப்படும்.

சிங்கப்பூரில் உள்ள 48 கோல்ட் ஸ்டோரேஜ் கிளைகளையும் 41 ஜயன்ட் கிளைகளையும் அதை நடத்திவரும் டிஎஃப்ஐ (DFI) சில்லறை வர்த்தகக் குழுமம் மலேசியாவின் மேக்ரோவேல்யூ (Macrovalue) குழுமத்துக்கு விற்பதாக திங்கட்கிழமை (மார்ச் 24) அறிவித்தது.

அதையடுத்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடுக்கு அளித்த பேட்டியில் மேக்ரோவேல்யூ நிறுவன உரிமையாளர் ஆண்ட்ரூ லிம் இதர பேரங்காடிகளில் இல்லாத சிறப்பான பொருள்கள் கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் பேரங்காடிகளில் இருக்கும் என்றார்.

ஜயன்ட் பேரங்காடிகளின் வாடிக்கையாளர்கள் முட்டை, கோழி, பழம், காய்கறிகள் உட்பட வீட்டு உபயோகப் பொருள்களை இன்னும் சிறந்த விலையில் வாங்கலாம் என்றும் திரு ஆண்ட்ரூ குறிப்பிட்டார்.

மேக்ரோவேல்யூ குழுமம் வணிகத்தை வலுப்படுத்துவதில் குறியாய் இருப்பதால் அடுத்த ஓராண்டுக்குள் சிங்கப்பூரில் பல பகுதிகளில் புதிய கிளைகள் திறக்கப்படவிருக்கிறது.

மேக்ரோவேல்யூ ஒட்டுமொத்த கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் பேரங்காடிகளையும் 125 மில்லியன் வெள்ளிக்கு வாங்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்