அதிக சிறுவர்களுக்குத் தலையில் காயம்: கே.கே. அவசரப் பிரிவு மருத்துவர்

அதிக சிறுவர்களுக்குத் தலையில் காயம்: கே.கே. அவசரப் பிரிவு மருத்துவர்

1 mins read
சைக்கிளோட்டிகள் தலைக்கவசம் அணிவது பாதுகாப்பானது
7468ff41-4327-49ff-a15b-803fffa63f1c
சிறுவர்களின் உடல் அமைப்பின்படி அவர்களின் தலையே பெரிதாக இருப்பதால் அது எளிதில் காயமடைவதாக கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசரப் பிரிவு மருத்துவர் டாக்டர் சுப்ராணி மதிப்ரெசகுல் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சாலை விபத்துகள் பத்தாண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. சாலை விபத்துகளில் 2016ஆம் ஆண்டு மாண்டோர் எண்ணிக்கை 141ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 149க்கு உயர்ந்தது. சாலை விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2024ஆம் ஆண்டு 9,342ஆக இருந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 9,955 என அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளில் பிள்ளைகள் காயமடையும் போக்கைக் கண்டுவருவதாக கே.கே. சிறார், மகளிர் மருத்துவமனை தெரிவித்தது. தேசிய அவசரச் சிகிச்சைப் பதிவேட்டின்படி சாலை விபத்துக்குள்ளான பிள்ளைகளில் கிட்டத்தட்ட 9.9 விழுக்காட்டினரும் பெரியவர்களில் ஏறக்குறைய 28.1 விழுக்காட்டினரும் தலைக் கவசம் அணியவில்லை. கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசரப் பிரிவு மருத்துவர் சுப்ராணி மதிப்ரெசகுல் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளில் காயமடைந்த பிள்ளைகளைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களில் பெரும்பாலோருக்கு லேசான காயங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அனுமதிக்கப்பட்ட அதே நாளில் வீட்டுக்குத் திரும்பிவிடுகின்றனர் என்றார். வெகு சில நோயாளிகளுக்குத்தான் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றார் டாக்டர் மதிப்ரெசகுல். சாலை விபத்துகளில் பிள்ளைகளிடம் ஏற்படும் லேசான காயங்கள் நாளடைவில் மோசமாகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் மதிப்ரெசகுல் எச்சரித்தார். பிள்ளைகளின் எலும்புகள் மென்மையானவை என்றும் எளிதில் உடையக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தசைகளில் ஏற்படும் லேசான காயங்கள் நாளடைவில் மோசமாகும்போதுதான் வெளிப்படையாகத் தென்படத் தொடங்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தலைக்கவசம்பொதுப் போக்குவரத்துமரணம்சாலை விபத்துசிறுவர்அவசரநிலைமருத்துவமனை