தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் கூடுதல் வீடுகள்

2 mins read
07540380-6ef0-4081-826e-3d790b5dd9ee
பாசிர் ரிஸ் வட்டாரத்தின் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாசிர் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் கூடுதல் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. பாசிர் ரிஸ் வட்டாரத்தின் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் வீடுகள் கட்டப்படும்.

பாசிர் ரிஸ் நகர மையத்திற்கான புதிய சமூக நடுவம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் நகல் பெருந்திட்டம் 2025ஐ பொறுத்தவரை, 2.9 ஹெக்டர் பரப்பளவு நிலத்தில் வீடுகள் கட்டப்படும்.

இப்பரப்பளவு நான்கு காற்பந்துத் திடல்களுக்குச் சமம்.

இந்த இடம் வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் மாடி வர்த்தகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும்.

அதுமட்டுமல்லாது, பாசிர் ரிஸ் வட்டாரத்தில் புதிய குடியிருப்புப் பகுதியை உருவாக்குவது தொடர்பாகவும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இது சுங்கை லோயாங்கிற்கு அருகில் அமைந்துள்ளது.

தற்போது அப்பகுதியில் பல தாவரங்கள் உள்ள இடமாக இருக்கிறது.

“அப்பகுதிக்கான எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்குள் அங்குள்ள பல்லுயிர் அம்சங்களை உள்வாங்கிக்கொள்வது குறித்து சுற்றுப்புற ஆய்வு ஒன்று நடத்தப்படுகிறது,” என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

இந்தப் பெருந்திட்டம் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு அடுத்த பத்து ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள்வரை வழிகாட்டியாகத் திகழும். இதுதொடர்பான கண்காட்சி நகர மறுசீரமைப்பு ஆணைய நிலையத்தில் நவம்பர் 29ஆம் தேதிவரை நடைபெறும்.

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துடைக்கும் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் 26ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது.

பாதுகாப்பை உறுதி செய்யவும் இடையூறுகளைக் கட்டுப்படுத்தவும் இப்பணிகள் கட்டங்கட்டமாக நடைபெறும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் கட்டப்படும் குடியிருப்புப் கட்டடங்கள் ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களைவிட உயரமாகக் கட்டப்படக்கூடும் என்று Mogul.sgயின் தலைமை ஆய்வு அதிகாரி திரு நிக்கலஸ் மாக் கூறினார்.

விமான நிலையங்கள் அருகில் உள்ள கட்டடங்களின் உயரம் தொடர்பான விதிமுறைகள் அண்மையில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் திருத்தப்பட்டதை அவர் சுட்டினார்.

உதாரணத்துக்கு, பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள 2.9 ஹெக்டர் நிலப்பகுதி சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகளிலிருந்து ஏறத்தாழ 3.8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன.

இனி அங்கு 60 மீட்டர் உயரம் வரையிலான கட்டடங்கள் கட்டப்படலாம்.

இதற்கு முன்பு கட்டட உயரத்தின் வரம்பு 45 மீட்டராக இருந்தது.

விதிமுறைகள் ஆகஸ்ட் 5ல் திருத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்