நினைவாற்றல் இழப்பால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏவாவின் (AWWA) பங்காளி அமைப்புகளுக்குச் சென்று தங்களின் மன, உடல் நலத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு[Ϟ]வரும் ‘கேர் பியோண்ட் வால்ஸ்’ (Care Beyond Walls) திட்டத்துக்காக மேலும் அதிகமான அமைப்புகள் கைகோத்துள்ளன.
இயல்பாக அமைந்த, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சூழலில் சமூகச் சேவை அமைப்பான ‘ஏவா’, இந்நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.
திட்டம் 2022ல் ஸ்ரீ தர்ம முனீஸ்வரன் கோவில், ஜாமியா குழந்தைப் பராமரிப்பு நிலையம், இலாயஸ் பார்க் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுடன் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது 12 பங்காளி அமைப்புகள் திட்டத்தில் உள்ளதாக அண்மைய ஊடகச் சந்திப்பில் ஏவா குறிப்பிட்டது.
முதியவர்களின் ஆர்வம் அடிப்படையில் புதிதாகச் சேர்ந்த பங்காளி அமைப்புகளில் நாய்[Ϟ]களுக்கான காப்பகம், மீன் பண்ணை, பௌத்த மடாலயம் போன்றவையும் அடங்கும்.
இதற்கிடையே, ஏவா அதன் திட்டங்களுக்காக அணுகிய அமைப்புகளில் 50 விழுக்காடு மட்டுமே இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது, 2024 மார்ச் மாதத்துக்குள் 30 பங்காளி அமைப்புகளுடன் கைகோக்கும் இலக்கைக் கொண்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது.
“டிமென்ஷியா இன்னமும் களங்கமாகக் கருதப்படும் ஒன்றாக உள்ளது. மறதிநோயுள்ள முதியவர்களைச் சரிவர கையாள முடியுமா என்பது குறித்து அமைப்புகள் அச்சப்படுகின்றன,” என்று ஏவாவின் சுகாதாரப் பரா[Ϟ]மரிப்புத் துணை நிபுணர்க்குழுவின் மூத்த தொழில்சார் சிகிச்சையாளர் திருவாட்டி சுவா ஷி ஜியா கூறினார்.
எனவே, டிமென்ஷியா உள்ளவர்களுடன் மேலும் நன்கு கலந்துறவாடும் தன்னம்பிக்கையையும் திறன்களையும் ஏவா அமைப்பு அதன் ஊழியர்களுக்கும் பங்காளி அமைப்புகளைச் சேர்ந்தோருக்கும் பயிற்சிவழி கற்பிக்க முற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்வம் காட்டிவரும் மேலும் பலதரப்பினரிடம் ஏவா தொடர்ந்து பேசிவர, பல்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த அமைப்புகள் இத்திட்டத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

