புக்கிட் தீமா டர்ஃப் சிட்டி, முன்னாள் கெப்பல் கோல்ஃப் மைதானத்தில் இடங்கள் விற்பனை

2025ல் அதிக தனியார் வீடுகள்

3 mins read
3daa7f27-7855-4ce0-84f7-daf23b862e03
2021ஆம் ஆண்டின் இறுதியில் 16,100 ஆக இருந்த புதிய தனியார் வீடுகளின் அறிமுகம் 2024 நவம்பருக்குள் தோராயமாக 21,000 ஆக உயர்ந்துள்ள நிலையில், தனியார் வீட்டு வசதி படிப்படியாக அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில் உள்ள இரு புதிய வீடமைப்புப் பேட்டைகள், முன்னாள் கெப்பல் கோல்ஃப் மைதானம் ஆகியவை உட்பட 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், தனியார் வீடமைப்புக்கான அதிகமான நிலங்கள் வெளியிடப்பட உள்ளன.

வரும் 2025ன் முதல் பாதியில் உறுதிசெய்யப்பட்ட பட்டியலின்படி, எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் (கண்டோமீனிய) உட்பட தனியார் வீடுகளின் மொத்த விநியோகத்தை கிட்டத்தட்ட 57,200 ஆக உயர்த்தும்.

இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தெரிவித்துள்ளது.

பத்து உறுதிசெய்யப்பட்ட வீடமைப்பு இடங்களும் ஒன்பது ஒதுக்கப்பட்ட இடங்களும் உள்ளன.

உறுதிசெய்யப்பட்ட பட்டியலிலுள்ள இடங்கள், 980 எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் உட்பட ஏறக்குறைய 5,030 தனியார் வீடுகளையும், வணிக பயன்பாட்டிற்காக 43,000 சதுர மீட்டர் மொத்த தரைப் பரப்பளவையும் வழங்குகின்றன.

சந்தைத் தேவையின் அடிப்படையில் மேம்பாட்டாளர்கள் வளர்ச்சியைத் தொடங்க அனுமதிக்கும் ஒதுக்கப்பட்ட பட்டியல், கூடுதலாக 3,475 வீடுகள், 199,900 சதுர மீட்டர் மொத்த வணிக தரைப் பரப்பளவு, 530 ஹோட்டல் அறைகளை வழங்கும்.

நான்கு தனியார் குடியிருப்பு பகுதிகள், ஒரு வர்த்தகப் பகுதி, வணிகப் பயன்பாடு, குடியிருப்பு, கடைகள் என பல பயன்பாட்டுக்கான மூன்று பகுதிகள், ஒரு ஹோட்டல் பகுதி ஆகியவை ஒதுக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்க நில விற்பனைத் திட்டமானது வீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதுடன் சந்தை நிலைத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக்கொண்ட குடியிருப்பு, வணிக ஹோட்டல் மேம்பாடு உள்ளிட்ட கலவையாக இருக்கும்.

தனியார் வீட்டு விநியோகம் சீராக அதிகரித்துள்ளது. 2021ன் இறுதியில் 16,100 ஆக இருந்த வீடுகளில் எண்ணிக்கை 2024 நவம்பர் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 21,000 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்க நில விற்பனை திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட நில விநியோக நடவடிக்கை, வீட்டுச் சந்தையை நிலைப்படுத்த உதவியதுடன் சொத்து விலை உயர்வும் மிதப்படுத்தப்பட்டது என்று தேசிய வளர்ச்சி அமைச்சு குறிப்பிட்டது.

2025ன் முதல் பாதியில் முன்னாள் கெப்பல் கோல்ஃப் மைதானம், புக்கிட் தீமா டர்ஃப் நகரத்தில் முதல் தனியார் குடியிருப்புக்கான மனைகள் விற்பனைக்கு வருகின்றன.

கிட்டத்தட்ட 48 ஹெக்டேர் பரப்பளவைக்கொண்ட முன்னாள் கெப்பல் கோல்ஃப் மைதானத்தில் ஏறக்குறைய 6,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் உள்பட கிட்டத்தட்ட 9,000 புதிய வீடுகள் கட்டப்படும். நகர மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதி, தெற்கு நீர்முகப்பை துடிப்பான கலவையான பயன்பாட்டின் நுழைவாயிலாக மாற்றுவதற்கு பங்களிக்கும்.

தெலுக் பிளாங்கா ரோட்டில் அமையும் முதல் தனியார் வீடமைப்புப் பகுதியில், ஏறக்குறைய 740 வீடுகள் அமையும். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதன் விற்பனை தொடங்கும்.

இதற்கிடையில், புக்கிட் தீமா டர்ஃப் நகரம் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 15,000 முதல் 20,000 பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களுடன் நீண்டகால வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புக்கிட் தீமா டர்ஃப் நகரம் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 15,000 முதல் 20,000 பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களுடன் நீண்டகால வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

இதற்கிடையில், புக்கிட் தீமா டர்ஃப் நகரம் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 15,000 முதல் 20,000 பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களுடன் நீண்டகால வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கார் அற்ற, பாதசாரிகளுக்கு உகந்த குடியிருப்புப் பேட்டையாக உருவாக்கப்படும். மரபுடைமை கட்டடங்களையும் பசுமை இடங்களையும் ஒருங்கிணைத்து தனித்துவமான சுற்றுச் சூழலுடன் உருவாக்கப்படும்.

டன்யர்ன் ரோடு பகுதியில் முதல் தனியார் குடியிருப்புப் பேட்டையில், ஏறக்குறைய 370 வீடுகள் கட்டப்படும். இது புக்கிட் தீமா டர்ஃப் நகரத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதியின் புத்துயிர்ப்பைத் தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்