நவம்பர் 1ஆம் தேதி முதல், சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) அதிக பயணங்களை மேற்கொள்வோருக்கான வெகுமதித் திட்டத்தின்கீழ், விமான பயணச் சீட்டுகள் பெற அல்லது குறிப்பிட்ட சில விமானப் பயணங்களை உயர்பிரிவுக்கு மாற்றப் பயணிகள் அதிகமான மைல் தூரம் வானத்தில் பறந்திருக்க வேண்டும்.
எனினும் விமானப் பயண தூரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான விமானங்களில் இருக்கைகளைப் பெற ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் விமான சேவையான எஸ்ஐஏ திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தனது வெகுமதித் திட்டமான கிரிஸ்ஃப்ளையரில் பல மாற்றங்களை அறிவித்தது.
நவம்பர் 1 முதல், பல விமானப் பயணங்களுக்கு அல்லது உயர்பிரிவுக்கு மாற்றத் தேவைப்படும் மைல் தூரம் 5 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும்:
ஆக அதிகமாக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, துருக்கி நாடுகளுக்கான விமான பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கான மைல் தூரம் 10 முதல் 20 விழுக்காடு அதிகரிக்கிறது.
நவம்பர் முதல் தேதிக்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட முன்பதிவு, பயணச் சீட்டுகள் தற்போதைய விகிதங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று எஸ்ஐஏ கூறியது..
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்டார் அலையன்ஸ், பங்காளி ஏர்லைன்ஸ் சேவைகளில் புதிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
மேல் விவரங்களை https://www.singaporeair.com/en_UK/sg/ppsclub-krisflyer/krisflyer/ என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

