தாதிமை பட்டயப் படிப்பு முடித்த மாணவர்கள் அதிகமானோர் என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் சேர்ப்பு

தாதிமை பட்டயப் படிப்பு முடித்த மாணவர்கள் அதிகமானோர் என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் சேர்ப்பு

படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

01 Nov 2026 - 3:01 pm

1 mins read

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) மருத்துவப் பள்ளியில் அண்மைய ஆண்டுகளில் தாதிமை பட்டயப் படிப்பு முடித்த மாணவர்கள் அதிகமானோர் சேர்ந்துள்ளனர்.

அவர்களில் குறிப்பாக, இவ்வாண்டு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் இடம்பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் சேர்வதற்கான வழிமுறை 2007ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்து வந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக மட்டுமே தாதிமை பட்டயம் பெற்றவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் சேர்ந்த நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல் தாதிமைத் துறை பட்டதாரி, அதன் 2018ஆம் ஆண்டு வகுப்புப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அப்பலதுறைத் தொழிற்கல்லூரி தெரிவித்தது.

அதேவேளையில், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல் தாதிமைத் துறை பட்டதாரி 2022ஆம் ஆண்டில் என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். அப்போதிலிருந்து இதுவரை, இவ்வாண்டு இணைந்த மாணவர்கள் ஐவரையும் சேர்த்து, மொத்தம் 15 நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி தாதிமைத் துறையின் முன்னாள் மாணவர்கள் அப்பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் நீ ஆன், நன்யாங் ஆகிய இரு தொழிற்கல்லூரிகள் மட்டுமே தாதிமைப் பட்டயப் படிப்பை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்