‘மதர்ஷிப்’பின் அங்கீகாரம் ஆறு மாதம் ரத்து

‘மதர்ஷிப்’பின் அங்கீகாரம் ஆறு மாதம் ரத்து

1 mins read
e0daad51-a6e0-4bcb-9cbe-870748fc880c
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்கான காலநேர கட்டுப்பாட்டை மீறியதற்காக ‘மதர்ஷிப்’ என்ற உள்ளூர் ஊடகத்தின் செய்தித்துறை அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.   - படம்: மதர்ஷிப்.காம் 

‘மதர்ஷிப்’ என்ற உள்ளூர் ஊடகத்தின் செய்தித் துறை அங்கீகாரம் தற்காலிகமாக ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்கான காலநேரக் கட்டுப்பாட்டை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர்க் கட்டணம் தொடர்பாக அந்த ஊடகம் தன்னுடைய இணையத்தளத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டது.

ஆனால், அந்தச் செய்தியை அம்மாதம் 27ஆம் தேதிதான் வெளியிட வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடு இருந்தது.

அதை மீறியதற்காக தொடர்பு, தகவல் அமைச்சு ‘மதர்ஷிப்’பின் செய்தித் துறை அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்தது.

2024ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வரை ‘மதர்ஷிப்’பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோன்று காலநேரக் கட்டுப்பாட்டை மீறியதற்காக ‘மதர்ஷிப்’ ஊடகத்தின் அங்கீகாரத்தை அமைச்சு ஆறு மாதங்களுக்கு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்