விபத்துகளில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் எண்ணிக்கை முதல் காலாண்டில் இருமடங்கு அதிகரிப்பு

1 mins read
c588a78b-b253-4c5e-b052-d980fa48a0aa
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, கடந்த ஈராண்டுகளின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், அதன் பின்னிருக்கையில் பயணம் செய்தோரின் மொத்த எண்ணிக்கை அது.

2021, 2022ஆம் ஆண்டுகளில் அவ்வாறு உயிரிழந்தோர் எண்ணிக்கை முறையே 12 மற்றும் 12.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 21 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை என்று மோட்டார் சைக்கிள், சாலைப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை நிலையாக இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சாலை விபத்தில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுடன் பயணம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அச்சுறுத்தலாக அமைந்தாலும் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவர் பெர்னார்ட் டே கூறினார்.

குறிப்புச் சொற்கள்