தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயர் ராஜா விரைவுச்சாலை விபத்து; ஆடவர் மரணம்

1 mins read
6bdf56e3-5c25-4ffa-ba1c-04a21fcc3881
மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்த விபத்து குறித்து காலை 7.20 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. - படம்: ஷின் மின்

ஏப்ரல் 12ஆம் தேதி காலையில், மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிய விபத்து ஒன்றில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்த அந்த விபத்து குறித்து காலை 7.20 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

அந்த நேரத்தில் கனத்த மழை பெய்துகொண்டிருந்தது.

சம்பவ இடத்திலேயே மோட்டார்சைக்கிளோட்டியின் மரணத்தை உறுதிசெய்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.

லாரியை ஓட்டிய 46 வயது ஆடவர் விசாரணையில் உதவிவருவதாக காவல்துறை தெரிவித்தது.

சென்ற ஆண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள், அவர்களுடன் பயணம் செய்தவர்கள் ஆகியோர் உயிரிழந்த விகிதம் 44.7 விழுக்காடு அதிகரித்தது.

மொத்தம் 68 பேர் உயிர் இழந்ததாகக் காவல்துறை வெளியிட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டின.

சிங்கப்பூரில் வாகனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்கள் 15 விழுக்காட்டுக்கும் குறைவு. இருப்பினும், 2023ல் நிகழ்ந்த அனைத்து சாலை விபத்துகளிலும் பாதிக்கும் மேல், மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் பயணம் செய்தோரும் சம்பந்தப்பட்டவை.

குறிப்புச் சொற்கள்