ஆயர் ராஜா விரைவுச்சாலையில் டிசம்பர் 28ஆம் தேதி காலையில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
அதில் 58 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கவனமின்றி வாகனமோட்டி, மரணம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில், 46 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 28ஆம் தேதி காலை 11.30 மணிக்கு விபத்து குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.