உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (பிகேஇ) சனிக்கிழமை (அக்டோபர் 31) பின்னிரவு நடந்த விபத்தில் 60 வயது மோட்டார்சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
அன்றைய தினம் நள்ளிரவு கடந்து 12.30 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி நோக்கிச் செல்லும் விரைவுச் சாலையில் நடந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் (எஸ்சிடிஎஃப்) கூட்டாகத் தெரிவித்தன.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவின்றி உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.
அன்றையதினம் 12.39 மணியளவில் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் பிகேஇ விரைவுச் சாலையில் சோதனைச் சாவடிக்கு இட்டுச் செல்லும் 10B நுழைவுப் பாதைக்கு முன் விபத்து நடந்ததால் நான்கு சாலைத் தடங்களில் ஒன்றில் தடை ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்தது. அந்தப் பாதை வழியாக ஜோகூருக்குச் செல்வோர் தாமதத்தை எதிர்பார்க்கவேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
பிறகு அதேநாள் அதிகாலை 3.18மணிக்கு அங்கு போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டது என்று ஃபேஸ்புக்கில் ஆணையம் அறிவித்தது.
மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு, 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் சாலை விபத்தினால் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது என்று போக்குவரத்துக் காவல்துறை தரவுகள் காட்டுகின்றன.
