டாக்சியில் மோதி காற்றில் பறந்து விழுந்த மோட்டர் சைக்கிளோட்டி

1 mins read
ba58927f-676c-4a88-8d6d-bf441cf648f9
படம்: SG ROAD VIGILANTE -

மோட்டர் சைக்கிளோட்டி டாக்சி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் செவ்வாய்க்கிழமை (மே 23) மாலை மேயர் ரோட்டை நோக்கிச் செல்லும் தஞ்சோங் ரூ ரோட்டில் நடந்தது.

டாக்சியும் மோட்டர் சைக்கிளோட்டியும் மோதிக்கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

டாக்சியில் மோதி மோட்டார் சைக்கிளோட்டி காற்றில் பறந்துபோய் கீழே விழும் காட்சி தெளிவாக இடம்பெற்றிருந்தது.

விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை மாலை 5:35 மணிவாக்கில் தங்களுக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிளோட்டிக்கு 26 வயது, அவர் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்