காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்

காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்

1 mins read
b68823ee-7944-4572-8d97-4335bf0ebcf8
படம்: SG ROAD CHAT/TELEGRAM -

இஸ்தானா அருகே மோட்டார்சைக்கிளும் காரும் மோதிக்கொண்டன.

அந்த விபத்தில் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டார் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்.

காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிள் ஓட்டுநரை கருவிகளின் உதவியால் பத்திரமாக அதிகாரிகள் மீட்டனர்.

விபத்து புதன்கிழமை (ஏப்ரல் 20) காலை 9:50 மணிவாக்கில் கேவனா சாலை - புக்கிட் தீமா சாலை சந்திப்பில் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநரின் வயது 54 என்று தெரிவிக்கப்பட்டது.

சுயநினைவுடன் இருந்த அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து தொடர்பாக 58 வயது மாது விசாரணைக்கு உதவிவருகிறார்.

காவல்துறையினரின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்