தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையில் ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது.
வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) அப்பாதையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டதால் காலை உச்ச நேரத்தில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. உட்லண்ட்ஸ் நார்த், பேஷோர் ஆகிய நிலையங்களுக்கு இடையே ரயில்கள் மெதுவாகச் செல்ல நேரிட்டது.
அவ்விரு நிலையங்களுக்கு இடையே பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தெரியப்படுத்தியது.
இப்போது எஸ்எம்ஆர்டி பொறியாளர்கள் சமிக்ஞை கோளாற்றை சரிசெய்துவிட்டதாகவும் ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியன்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ரயில் கோளாறு காரணமாக உச்ச நேரத்தில் சேவை தாமதம் ஏற்பட்டது.

