சிங்கப்பூரில் கர்ப்பமாகும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் அத்தகைய பிரசவங்களின் எண்ணிக்கை கூடியது எனவும் 19 வயதுக்கும் குறைவான வயதுடைய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 244 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 228.
2022இல் அந்த எண்ணிக்கை 218ஆக இருந்தது.
சாரா, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயாரின் கடும் எதிர்ப்பு, முன்னாள் துணைவரும் ஆதரவு தரவில்லை என்றாலும் உயர்நிலை மூன்றாம் வகுப்பு பயின்ற நேரத்தில் பள்ளியிலிருந்து வெளியேறி 15 வயதில் தாயானார்.
அவரது பெண்குழந்தைக்குத் தற்போது 11 மாதம் ஆகிறது. “முதலில் கருக்கலைப்பு செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் என் குழந்தையைப் பார்த்தவுடன் அவளுடன் வலுவான பிணைப்பு ஏற்பட்டது. குழந்தை கள்ளங்கபடமற்றது. எனவே நான் செய்த தவறுக்கு பொறுப்பு எடுக்க முன்வந்தேன்,” என்றார் சாரா.
அவரைப் போன்ற பலர் தற்போது தாயாகி வருவதாக ஜூலை 18ஆம் தேதி சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஜூன் 15ஆம் தேதி 2024 பிறப்பு, இறப்புக்கான அறிக்கை சுட்டியது.
பதின்ம வயது கர்ப்பினிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமான பேப்ஸ் கர்ப்பக்கால நெருக்கடி ஆதரவு அமைப்பின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி மெலிசா வோங், கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் பதின்மவயதினர் பலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது பிற எதிர்மறை உணர்ச்சிகளுடன் போராடுவதாகவோ உணர்ந்ததாக சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்துவந்த சூழலைச் சமாளிக்க அல்லது வேறொரு பிணைப்பைத் தேட அத்தகையோர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் திருவாட்டி மெலிசா கூறினார்.