சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை திங்கட்கிழமை (மார்ச் 31) கொண்டாடுவர் என்று முஃப்தி நஸிருதின் முகமது நசிர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் அறிவித்துள்ளார்.
வானியல் கணக்குளின்படி, இஸ்லாமிய நாள்காட்டியின் ஷவால் மாதத்துக்கான பிறை மார்ச் 30ஆம் தேதி சூரியன் மறைந்த பிறகு காணப்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் முஸ்லிம்கள் அனைவருக்கும் முஃப்தி தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
“இந்த நோன்புப் பெருநாள், கடந்த ரமலான் மாதம் முழுவதும் நாம் மேற்கொண்ட தொழுகை, நற்செயல்களின் விளைவாக அனைவருக்கும் ஆசிகளையும் வெற்றியையும் தருவதாக அமையட்டும்,” என்று முஃப்தி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.