மியன்மாரில் இருந்து வந்த பணிப்பெண் தமது முதலாளியின் 70 வயது மாமியாரைக் கொன்றார்.
சம்பவம் 2018ஆம் ஆண்டு நடந்தது. பணிப்பெண் மீதான குற்றம் மே 18ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.
சின் மர் நியூ என்ற அந்த 22 வயது பணிப்பெண், 70 வயது மாதை 26 முறை கத்தியால் குத்திக் கொன்றார்.
தம்மை ஊருக்குத் திருப்பி அனுப்புவதாக 70 வயது மாது மிரட்டியதால் பணிப்பெண் அவரைத் தாக்கியுள்ளார்.
சம்பவம் நடந்த போது பணிப்பெண்ணுக்கு 17 வயதுதான். அவரின் கடப்பிதழில் போலியாக 23 வயது என்று பதிவுசெய்யப்பட்டது விசாரணையின்போது தெரிய வந்தது.
பணிப்பெண் தாக்கியபோது அவருக்கு மனரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொலை நடந்த நாளே பணிப்பெண் கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில் பணிப்பெண் மீதான குற்றம் மெய்ப்பிக்கப்பட்டது.
இன்னும் சில நாள்களில் அவருக்குத் தண்டனை அறிவிக்கப்படும்.
சிங்கப்பூரில் கொலைக் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.