சிங்கப்பூரின் நாகூர் சங்கம் நடத்திய குடும்ப தினம் 2025, ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாசிர் ரிஸ் பார்க்கில் தலைவர் முஹம்மது அஸீம் மற்றும் துணைத் தலைவர் இத்ரிஸ் மாலிம் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் உஸ்தாத் ஷாஹ்ஜாத் புகாரி கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
செயலாளர் இப்ராஹிம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
‘முயிஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின் தலைமை நிர்வாகி காதர் முஹைதீன், பென்கூலன் பள்ளிவாசலின் தலைவர் முஹம்மத் ரபீக் ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
துணைத் தலைவர்களான முஹம்மத், செய்யத் அலி இருவரும் குடும்ப தின விழாவிற்கு வருகையளித்த சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் நாகூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் உறவுகளைச் சந்தித்து அளவளாவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
இதுபோன்ற ஒன்றுகூடல்கள் ஒற்றுமையைப் போதிக்கின்றன என்று காதர் முஹைதீன் தமது உரையில் குறிப்பிட்டார்.
அவர் சிறுவர், பெரியவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

