போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,300 பேரின் பெயர்கள் கசிவு

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,300 பேரின் பெயர்கள் கசிவு

1 mins read
74645474-cda0-4ab5-afee-bc28a42ae4d9
மாதிரிப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சுமார் 1,300 பேரின் பெயர்களும் முகவரிகளும் இணையத்தில் கசிந்தது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

காவல்துறையுடன் இணைந்துப் பணியாற்றும் டொப்பன் நெக்ஸ்ட் டெக் (டிஎன்டி) நிறுவனத்தின் முறை பிணை நிரல் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியோரின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தன. அத்தகவல்கள் இம்மாதம் 18ஆம் தேதி கசிந்தது தெரியவந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு மன்றமும் வியாழக்கிழமை (ஜூலை 24) தெரிவித்தன.

எனினும், பல மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற இணைய ஊடுருவல்தான் இந்தத் தகவல் கசிவுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அஞ்சல்வழி தகவல்களை அனுப்ப அவர்களின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை எண்கள், அவர்கள் புரிந்த போக்குவரத்துக் குற்றங்கள் போன்றவற்றை டின்டி, காவல்துறையிடமிருந்து பெற்றிருந்தது. போக்குவரத்துக் காவல்துறையின் தரவுகளில் உள்ளதாக நம்பப்படும் பெயர்கள், முகவரிகள் மட்டும்தான் இணையத்தில் கசிந்தன; மற்ற தகவல்கள் கசிந்து பகிரப்பட்டதற்கு அறிகுறி ஏதும் இல்லை.

போக்குவரத்து காவல்துறையின் முறைகள் எதுவும் ஊடுருவப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இணையத் தாக்குதல்ஊடுருவல்காவல்துறைகசிவு