தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகள்

நான்கு துறைகளில் கவனம் செலுத்தும்

தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகள்

1 mins read
1a06b0b6-09e0-450a-bb86-4ed99d31090e
அமைப்புகள் பின்பற்ற ஏதுவாக, அரசாங்கத்தின் ஆய்வு, வளர்ச்சி, முறைப்படுத்துதல், முதலீடு மேம்பாடு ஆகியவற்றுக்கான முயற்சிகள் முறைப்படுத்தப்படும் (Align) என்றும் சொன்னார் பிரதமர் வோங். - படம்: பிக்சாபே

சரியாகப் பயன்படுத்தப்பட்டால் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிங்கப்பூருக்கு உத்திபூர்வ நன்மையாக அமையும் என்று தமது வரவு செலவுத் திட்ட உரையில் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், அதற்காகப் புதிய ‘தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகளை’ (AI Missions) அறிவித்தார்.

இந்த இலக்குகள், மேம்பட்ட உற்பத்தி, இணைப்புகள் (Connectivity), நிதி, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய நான்கு துறைகளில் ‘ஏஐ’ உதவியுடன் மேம்பாட்டை முன்னெடுக்கும்.

மேம்பட்ட உற்பத்தித் துறையின் புதிய ‘ஏஐ’ இலக்குகள் குறித்து வர்த்தக, தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அறிவிக்கப்படும்.

உற்பத்தியில் புத்தாக்கம், இணைப்பு ஆகியவற்றுடன் சிங்கப்பூரின் விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றின் இயக்கங்களைத் தானியக்கமயமாக்குவதன் மூலம் அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் இடத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில் இந்த இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசாங்கம் ஒவ்வொரு துறையுடனும் அணுக்கமாகச் செயல்பட்டு, அதில் உள்ள சிக்கல்களைக் கண்டறியும்.

இவை வெறும் கனவுகள் அல்ல என்ற திரு வோங், ஒவ்வோர் இலக்கும், தெளிவான நோக்கத்தையும் உறுதியான விளைவுகளையும் கொண்டிருக்கும் என்று உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்