குடியிருப்புப் பேட்டைகளில் தேசிய தினக் கொண்டாட்டங்கள்

2 mins read
30d7cc05-8694-4bb6-9966-d306f8fcd4b5
தென்கிழக்கு வட்டாரத்தில் ஆளில்லா வானூர்திக் காட்சி. - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) பிற்பகல் முதல் இரவு வரை தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

மக்கள் கழகமும் தேசிய தின அணிவகுப்பு 2025ன் செயற்குழுவும் இணைந்து அவற்றுக்கு ஏற்பாடு செய்தன.

எஸ்ஜி60ஐ முன்னிட்டு 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருங்கிணைந்த வாகன ஊர்வலம் (Mobile Column) குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெற்றது.

சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் 60 வாகனங்கள், எஃப்1 வில்லேஜிலிருந்து ஐந்து பாதைகள் வழியாகக் குடியிருப்புப் பேட்டைகளைச் சென்று அடைந்தன.

அவற்றைக் குடியிருப்பாளர்கள் மேலும் அருகில் காண்பதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு முதன்முறையாக, செல்லும் பாதையில் ஆங்காங்கே அவை 90 நிமிடங்கள் வரை நின்றன. அணிவகுப்பு இருக்கும் இடம் குறித்த நிகழ்நேரத் தகவல்களை தேசிய தின அணிவகுப்பு இணையத்தளம்வழி பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஜங்ஷன் 8க்கு அருகே இருந்த திறந்தவெளியில், திரளான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் மாலை 4.30 மணிக்கு (வானிலையால் சற்றுத் தாமதமாக) செஞ்சிங்கங்களின் வான்குடை சாகச அங்கம் இடம்பெற்றது.

மாலை 6 முதல் 6.30 மணி வரை நான்கு எஃப்-16 போர் விமானங்கள் வைர வடிவில், குடியிருப்புப் பேட்டைகளின்மேல் பறந்தன.

மாலை 6.30 மணி முதல் பீ‌‌‌ஷான், கேலாங்கில் சிறிது நேரம் லேசாக மழை தூறியது.

தொடர்புடைய செய்திகள்

மத்திய சிங்கப்பூர் வட்டாரத்தில், குடியிருப்பாளர்கள் இணைந்து சிங்கப்பூர் கருவிலான 600 புதிர்ப் பகுதிகளுடன் பிரம்மாண்ட எஸ்ஜி60 கண்காட்சியைச் செய்தனர்.

வடகிழக்கு வட்டாரத்தில் கூண்டு விளக்குகளுடன், ஒளிரும் போத்தல்களில் சிங்கப்பூருக்கான வாழ்த்துச் செய்திகளைக் குடியிருப்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர். வடமேற்கு வட்டாரத்தில் சிங்கப்பூரின் மைய இடங்களுடன் சமூகம் உருவாக்கிய ஓவியம் இருந்தது. தென்கிழக்கு வட்டாரத்தில் ‘ரிங் ஆப் லைட்’ ஸ்கேட்டிங் அனுபவம் இருந்தது. தென்மேற்கு வட்டாரத்தில் குடியிருப்பாளர்களின் வாழ்த்துகளுடன் மிதக்கும் கூண்டு விளக்குகள் காணப்பட்டன.

மலரும் நினைவுகளைக் கொண்டுவந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பிடோக், கெம்பாங்கான், கேலாங் ஆகியவற்றின் தனித்துவ அங்கங்களை வெளிப்படுத்திய காட்சியில் சக தொண்டூழியர்களுடன் அம்ருத்தா கலைச்செல்வன்.
பிடோக், கெம்பாங்கான், கேலாங் ஆகியவற்றின் தனித்துவ அங்கங்களை வெளிப்படுத்திய காட்சியில் சக தொண்டூழியர்களுடன் அம்ருத்தா கலைச்செல்வன். - படம்: ரவி சிங்காரம்
தென்கிழக்கு வட்டாரத்தில், சிங்கப்பூரின் பழைய நினைவுகளை நினைவுகூரும் காட்சியில் தயாளன், தாஸ், நண்பர்கள்.
தென்கிழக்கு வட்டாரத்தில், சிங்கப்பூரின் பழைய நினைவுகளை நினைவுகூரும் காட்சியில் தயாளன், தாஸ், நண்பர்கள். - படம்: ரவி சிங்காரம்

வானில் ‘எஸ்ஜி60’, ‘வாண்டா மிஸ் ஜோக்கிம்’ போன்ற அழகிய உருவங்களை உருவாக்கி மிளிர்ந்தன ஆளில்லா வானூர்திகள்.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

மனைவி, மகன் லாவி‌ஷ் உடன் CFC (NS) மாத்வா ராஜே‌ஷ்.
மனைவி, மகன் லாவி‌ஷ் உடன் CFC (NS) மாத்வா ராஜே‌ஷ். - படம்: ரவி சிங்காரம்

“எஸ்ஜி60 கொண்டாட்டம்போல் நீங்கள் அனைவரும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,” என வாழ்த்தினார் தென்கிழக்கு வட்டாரக் கொண்டாட்டத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ்.

சிறுவர்கள் இசா, ஃபுடைல் உடன் நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங்.
சிறுவர்கள் இசா, ஃபுடைல் உடன் நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்