ஆகஸ்ட் 23ல் தேசிய தினப் பேரணி உரை

ஆகஸ்ட் 23ல் தேசிய தினப் பேரணி உரை

1 mins read
இது திரு வோங்கின் மூன்றாவது தேசிய தினப் பேரணி உரையாக இருக்கும்
22b4a99b-f316-422b-81e4-a4446bc6e318
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.45 மணிக்குத் தொடங்கும்.

அவர் முதலில் மலாய் மொழியில் உரையாற்றுவார். பின்னர், மாண்டரின் மொழியில் உரையாற்றிய பிறகு, அவரது ஆங்கில உரை இரவு 8 மணிக்கு இடம்பெறும்.

அங் மோ கியோவில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் திரு வோங் அவரது உரையை ஆற்றுவார்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் வானொலி நிலையங்களிலும் அது ஒளி/ஒலிபரப்பப்படும். அத்துடன், பிரதமர் வோங் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் ஒளிவழிகளிலும் அது நேரலையாகக் காண்பிக்கப்படும்.

நேரடி ஒளிபரப்பைக் காணத் தவறியோர், ஆகஸ்ட் 24ஆம் தேதிமுதல் www.youtube.com/pmosingapore அல்லது www.pmo.gov.sg ஆகிய இணையத்தளங்களில் தேசிய தினப் பேரணி உரையைக் காணலாம்.

தேசிய தினப் பேரணி, பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கும் நாட்டின் முன்னேற்றம் குறித்து தெரியப்படுத்துவதற்கும் முக்கியக் கொள்கை விவகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் சிங்கப்பூரின் எதிர்காலச் சவால்களைக் கோடிக்காட்டுவதற்குமான ஒரு தளமாகும்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிகழ்வு, பிரதமர் வோங்கின் மூன்றாவது தேசிய தினப் பேரணி உரையாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்