தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் (என்கேஎஃப்) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திருவாட்டி யென் டான் நியமிக்கப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து அவர் என்கேஎஃப் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிப்பார்.
இதற்கு முன்பு அவர் கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் ஈசூன் ஹெல்த் அமைப்பின் தலைமை இயக்குமுறை அதிகாரியாக இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி டான்னுக்குச் சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளது.
என்கேஎஃப் அறநிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான 65 வயது திரு டிம் வீ 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று பதவி விலகுகிறார்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை அவர் என்கேஎஃப் அறநிறுவனத்தின் பகுதிநேர ஆலோசகராகச் செயல்படுவார்.
திரு டிம்மின் தலைமையின்கீழ் என்கேஎஃப் அறநிறுவனத்தின் கட்டமைப்பு விரிவடைந்தது.
என்கேஎஃப் ரத்த சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 32லிருந்து 42ஆக அதிகரித்தது.